ஹட்டன் பன்மூர் தோட்டம் மற்றும் கொட்டகலை பகுதியில் வெள்ள அபாயம்
ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 08 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் தற்காலிகமாக தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதுடன், எந்த தொலைபேசி வலையமைப்பும் செயல்படாத சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பிற அவசர நிவாரணங்களை வழங்குவது சிரமமாகியுள்ளது.
பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடி உணவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், கொட்டகலை ஆறுப்பெருக்கெடுத்ததால் கொட்டகலை லொக்கீல் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அங்கு வசிக்கும் குடும்பங்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் மழை தொடர்ந்தும் பெய்துவருவதால் மேலும் பல வீடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan