மோசமான வானிலையால் நுவரெலியாவில் விரயமான உணவுப்பொருட்கள்
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் நுவரெலியா பிரதான நகரம் முழுவதையும் மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நுவரெலியா பிரதான நகரில் வீடுகள், கட்டடங்கள் , ஏராளமான வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் வெள்ள நீர் தேங்கி காணப்பட்டது.
மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன , விற்பனை நிலையங்கள் வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
உணவுப்பொருட்கள் சேதம்
நுவரெலியாவில் வெள்ள நீர் உட்புகுந்த விற்பனை நிலையங்கள், களஞ்சியசாலைகள் போன்றவற்றிலுள்ள பெரும்பாலான உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்களை அழிப்பது பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான செயலாகும் என்பதால் நுவரெலியாவில் விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளில் உணவுக்கு உகந்ததாக இல்லாத அல்லது சேதமடைந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் அரிசி, பருப்பு, பயறு, கடலை, சீனி, சோயா மீட் , தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அதிகமான அத்தியாவசிய உணவு பொருட்கள் வெள்ள நீரால் பழுதாகியுள்ளன.
இதனை விற்பனையாளர்களும், களஞ்சியசாலை உரிமையாளர்களும் அகற்றி நுவரெலியா மாநகரசபை வாகனங்கள் மூலம் வெளியேற்றி அவற்றை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாத வகையில் அழித்து வருகின்றனர்.


சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri