தென்னிலங்கையில் அடைமழையால் வெள்ளம் - பல பகுதிகளுக்கு எச்சரிக்கை
நாட்டில் தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் படிப்படியாக தொடங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05.06.2023) அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தடை
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலக் காலப்பகுதியில், நாட்டின் பல பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி காலி மாவட்டத்தின் ஹினிதும பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அந்தப் பகுதியில் 101 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் நேற்று மாலை புலத்சிங்கள மொல்காவ, பரகொட, நா லியத்த பிரதேசங்களில் பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலாளர் ரங்கன பிரசாத் பெரேரா தெரிவித்தார்.
குக்குலே கங்கை அனல்மின் நிலையத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து குடா கங்கையின் தாழ்வான பகுதிகள் மற்றும் பாலிந்த கண்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடை ஏற்பட்டது.
நீரில் மூழ்கிய வீதிகள்
நேற்று மாலை குக்குலே கங்கை மின் நிலையத்தின் வான்கதவு திறக்கப்பட்டு நொடிக்கு 70 கனமீற்றர் நீர் கொள்ளளவு சிறிய ஆற்றில் திறந்து விடப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மகுரு ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பதுரலிய ஹெடிகல்ல வீதி மற்றும் அப்பகுதியில் உள்ள பல வீதிகள் நீரில் மூழ்கி நேற்று மாலை வரை போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
