வெள்ளத்தில் சிக்கிய கொழும்பு: மண்ணுக்குள் புதைந்துள்ள பல வீடுகள்
இலங்கையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 22 மாவட்டங்களில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக பல கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதால் சில வீடுகளைக் கண்டுபிடிப்பதும் கூட கடினமாகியுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகள்
இருப்பினும், மத்திய மலைப்பகுதிகளை தாக்கிய பேரழிவு மற்றும் கொழும்பு மாவட்டத்தை பாதித்த கடுமையான வெள்ளம் மக்களை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியில் 7 அடிக்கும் அதிகமான வெள்ள நீர் நிறைந்துள்ளதாகவும், இன்று (05) காலை சில இடங்களில் சுமார் ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
வெல்லம்பிட்டி, வெலேவத்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் தங்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர்.
இதற்கிடையில், சோமாவதிய புனித தலத்தை சுற்றியுள்ள பகுதி நீரில் மூழ்கியுள்ளது, மேலும் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் பாதிப்பு
இன்று காலை 6 மணிக்கு பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் 2,303 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், அதே நேரத்தில் 52,489 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri