சீரற்ற காலநிலை! வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாய ஆரம்பித்துள்ளதுடன், கெஹெல்கமு ஓயாவின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம்
கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக கொத்மலை - கம்பளை (B 431) பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, நிலவும் அபாய நிலையை கருத்திற்கொண்டு மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam