இலங்கையில் அசாதாரண சூழ்நிலை! அமெரிக்கத் தூதரகம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்
இலங்கையில் உள்ள அமெரிக்க துாதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்துச் செய்துள்ளது.
மிகுந்த எச்சரிக்கையுடன், தூதரகம் புதன்கிழமை பிற்பகல் சேவைகளையும் (அமெரிக்க குடிமக்கள் சேவைகள் மற்றும் என்ஐவி பாஸ்பேக்) மற்றும் வியாழக்கிழமையின் அனைத்து தூதரக சேவைகளையும் ரத்து செய்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் ரத்து செய்யப்பட்ட அனைத்து சந்திப்புகளையும் மீண்டும் திட்டமிடவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழல்
நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு நாட்களாக நாட்டில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.