பெக்கோ சமனின் மனைவி தொடர்ந்து விளக்கமறியலில்..
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சனியை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் சட்டவிரோதமாக பணம் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விசாரணை நடவடிக்கைகள்
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மித்தெனியவைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் சந்தேக நபர் எவ்வாறு ஈடுபட்டார் என்பதைக் குறிக்கும் சாட்சியச் சுருக்கத்தை அடுத்த நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
