உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அடையாளமிடப்படாத அபு ஹிந்த் யார்..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கடந்த கால விசாரணைகள் தொடர்பில் ஆளும் தரப்பானது, முன்னாள் அரசாங்கங்கள் மீதும் முன்னாள் அரசியல் தலைமைகள் மீதும் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை அம்பலப்படுத்தபோவதாகவும் ஆளும் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த நகர்வுகளை அடிப்படையாக கொண்டு சில சமூக அமைப்புக்கள் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய சந்தேகத்திற்கிடமான விபரங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளன.
அதில் முக்கியமாக அபு சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேனிய அபு ஹிந்தி என்பவருடைய மறைமுகம்.
அபு ஹிந்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானுக்கும், அபு ஹிந்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றி ரணில் அரசாங்கத்தின் ஆட்சியின் போது நாடாளுமன்றில் வாதிடப்பட்டன.
அபு ஹிந்திற்கும் சஹ்ரானுக்கும் உள்ள தொடர்பு பற்றிய விபரங்கள், மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க அபு ஹிந்த் உதவியிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு இயக்குநர் நிலந்த ஜெயவர்தன ஜனாதிபதி ஆணையத்தின் முன் தெரிவித்திருந்தமையும் இந்த சம்பவத்தின் முக்கிய பேசுபொருளாகும்.
சஹ்ரான் கூடுதலாக, அபு ஹிந்த் ரில்வான் மற்றும் நௌஃபர் மௌலவி ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாக அப்போதைய ஆணையத்தின் விசாரணைகளின் போது தெரியவந்தது
. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அப்போதைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில், "அபு ஹிந்த்" என்பது வெளிநாட்டு உளவுத்துறையால் தகவல்களைப் பெற பயன்படுத்தப்பட்ட ஒரு புனைப்பெயர் மட்டுமே என்று கூறினர் .
விசாரணை
இருப்பினும், ஜனாதிபதி ஆணையத்தில் வெளிவந்த தகவல்கள், அபு ஹிந்த் தாக்குதல்களில் முக்கிய பங்கேற்பாளராக அல்லது சாட்சியாகஇருந்ததைக் குறிக்கின்றன .
இன்றுவரை, அவரது உண்மையான அடையாளம் தெரியவில்லை . எனவே, அபு ஹிந்த் யார், யாருடைய அதிகாரத்தின் கீழ் அவர் செயல்பட்டு வந்தார் என்பதை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில சமூக அமைப்புக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலமாக கருதப்படும், கல்முனை தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி அதிகாரிகள் , ஜனாதிபதி ஆணையத்திற்கு அளித்த வாக்குமூலங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைய பதிவுகள் மற்றும் கடமைப் பதிவேடுகளில் உள்ள குறிப்புகள் ஆகியவற்றில் முரண்பாடுகள் உள்ளன என சில குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இந்த முரண்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டியதன் அவசித்தையும் மேற்குறிப்பிட்ட சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தாக்குதலில் இராணுவ தோட்டாக்கள்
ஏப்ரல் 27, 2019 அன்று, கல்முனை பொலிஸார் அங்கு இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் 16 இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.
ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அம்பாறை பொலிஸார் 17 இறப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
புதிய உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் 16 மட்டுமே என விவரித்தன.
இதன்காரணமாகவே 17வது மரணத்திற்கான அடிப்படையை விசாரிக்க வேண்டும் என குறித்த அமைப்புக்கள் கோரியுள்ளன.
கல்முனை தாக்குதலின்போது, துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் டிரேசர் வகையை சேர்ந்தது என ஜனாதிபதி ஆணையக விசாரணை வெளிப்படுத்தியது.
எனினும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு இதுபோன்ற தோட்டாக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது இன்னும் தெரியவில்லை என்றும் மேலும் அது விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் சமூக அமைப்புக்கள் வெளிப்படுத்திய தகவல்களில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
