விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரால் அறிக்கை வெளிவரலாம்! எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சர்ச்சை(Video)
பழ.நெடுமாறனின் அறிவிப்புக்கு பின்னால் இருப்பவர்களின் தேவை ஒரு அறிக்கையாக விரைவில் வெளிவரும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளராக இருந்த சங்கீதன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,“பழ.நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐந்து விடயங்கள் ஐந்து பந்திகளாக வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஈழ விடுதலை மற்றும் தேசிய விடுதலை தலைவரின் இயக்கத்தை அவதானித்தவர்களுக்கு, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது மணிஓசை இனி தான் யானை வரப்போகின்றது என தெரியும்.
இந்தியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை பார்த்தல் தெரியும், அதில் எமது தேசிய தலைவர் வெளிப்படும் போது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வுடன் தான் வருவார் என்று கூறப்பட்டுள்ளது.
நிச்சியமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பை பின்னால் இருந்து வலி நடத்துபவர்கள் எதை விரும்புகின்றார்களோ அது ஒரு அறிக்கையாக விரைவில் வெளியில் வர வாய்ப்பு உள்ளது.
அதாவது விடுதலைப் புலிகளின் தலைவர் இதை தான் தமிழ் மக்களுக்கான தீர்வாக முன்வைக்கிறார் என ஒரு அறிக்கைதான் வெளிவரும்.
அது இந்த ஊடக சந்திப்பின் அதாவது நெடுமாறனின் அறிவிப்பின் பின்னணியாகவே இருக்கும். திடீர் என்று தலைவர் வந்தார். அவர் இதை தான் தமிழ் மக்களுக்கான தீர்வாக தந்தார். அதை நாங்கள் ஏற்க தான் வேண்டும் என்று ஒரு சர்ச்சை உருவாகும்.
பிரபாகரனின் பெயரில் தமிழ் மக்கள் மீது ஒரு தீர்வு
பழ.நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் நடத்திய ஊடக சந்திப்பு திடீர் என்று நடத்தப்பட்டதற்கு முதல் நாள், தலைவர் இருக்கிறார், கதைக்கிறார் என அவர்களை நம்ப வைத்து இது செய்யப்பட்டுள்ளது.
கடந்தகால விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை பார்த்தால் இது முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளதுடன் இதில் இந்தியாவிற்கு ஒரு நெருக்கடி உள்ளது. அதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வருவது போல சொல்லப்படுகின்றது.
இதில் எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டியது தலைவரின் பெயரில் தமிழ் மக்கள் மீது ஒரு தீர்வை திணிக்க யார் முற்படுகின்றார்களோ அவர்களே இதன் பின்னணியில் இருப்பவர்கள்.”என கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
