வீரத்திற்கு பெயர்போன கிழக்கு மாகாணத்தின் முதுகெழும்பு கலைத்துறை!தர்மலிங்கம் சுரேஸ்
வீரத்திற்கு பெயர் போன கிழக்கு மாகாணத்தின் முதுகெழும்பாக கலைத்துறையை பார்க்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
இலங்கையின் கராத்தே துறையின் முன்னோடிகளில் ஒருவராகவும் இலங்கை கராத்தே சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான க.இராமசந்திரனின் 08வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பினை சேர்ந்த சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் இலங்கை கராத்தே சங்கத்தினை ஆரம்பிப்பதில் முன்னொடியாக இருந்ததுடன் அதன் தலைவராகயிருந்து இலங்கையில் கராத்தே வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கராத்தே துறையின் சாதனை
அத்துடன் வடகிழக்கு மாகாணத்திலும் கராத்தே துறையில் பல சாதனைகளுக்கும் காரணமாகயிருந்ததுடன் அவரை நினைவுகூரும் வகையிலான நிகழ்வு மட்டக்களப்பு வைஎம்சிஏ.மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை ராம் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபகரும் தலைவருமான பிரதம போதனாசிரியர் சிகான் கணபதிப்பிள்ளை குககுமாரராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், வை.எம்.சி.ஏ.யின் பொதுச்செயலாளர் ஏ.ஜுலியன் உட்பட கராத்தே சங்க மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உரிமைக்காக உயிர்நீர்த்தவர்களுக்காகவும், கராத்தே சங்கத்திலிருந்து
உயிர்நீர்த்தவர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரர்
சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு
மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.



