தென்னிலங்கையில் நடந்த கொடூரம் - குழந்தையை கொலை செய்த தாயின் முறையற்ற காதலன்
ஹோமாகம பகுதியில் வசிக்கும் பெண்ணின் மூன்று வயது மகள், திருமணத்திற்கு புறம்பான காதலனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தையைச் சேர்ந்த பெண்ணின் மகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையின் பின்னர் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், மகளின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை கொலை
காலை குழந்தை தாக்கப்பட்டு வெளியே அழைத்து செல்லப்பட்ட நிலையில், மாலையில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

ஆனால் மாலை ஏதோ ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மகள் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் அவரைக் கண்டுபிடிக்க மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.