வெள்ளத்தில் காப்பாற்றப்பட்ட யானைக் குட்டி
பொலன்னறுவையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை குட்டி ஒன்றை பிரதேச இளைஞர்கள் காப்பாற்றி நிலையில் விகாரை ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருவதாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் சம்பவம்

பொலன்னறுவை புலஸ்திகம பகுதியில் நேற்று முன்தினம் (28.11.2025) பாரிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் போது பிரதேச இளைஞர்கள் உயிரை பணயம் வைத்து இந்த யானைக் குட்டியை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர் பாதுகாப்பான இடமில்லாததால் விகாரையில் வைத்து பாரிமரித்து வருதாக விகாராதிபதி தெரிவித்தார்.
இந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றது. கிரித்தலே வனஜீவி பாதுகாப்பு மைத்திற்கு இந்த யானைக் குட்டியை ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.