விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் - ஊரையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஆடு வெருண்டு கொட்டகையின் சுவரை இடித்த நிலையில் சுவர் இடிந்து குழந்தை மீது விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
