இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு பாகிஸ்தான் அணியின் தலைவர் ஆதரவு
இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தானிய கிரிக்கட் அணியின் தலைவர் பாபர் அசாம், தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் 20க்கு 20 என்று அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை.
அத்துடன் ஒட்டங்களை பெறுவதிலும் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

விராட்கோலியை 20 க்கு 20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் கபில்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதுவும் கடந்து போகும். வலிமையுடன் இருங்கள் விராட் கோலி என பதிவிட்டுள்ளார்.
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam