இந்த வருடம் பாபா வாங்காவின் கணிப்பு இதை பற்றி தான்! மீண்டும் அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்
29 ஆண்டுகளுக்கு முன் பாபா வாங்காவால் கணிக்கப்பட்ட விடயம் தற்போது ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரழிவு
இந்த ஆண்டில், அவரது கணிப்பு போர், நோய்த்தொற்று அல்லது சூழலியல் பேரழிவுகளைப் பற்றியது அல்லாமல் நவீன கையடக்க தொலைப்பேசி பற்றி அமைந்துள்ளது.
இதற்கமைய, நவீன கையடக்க தொலைப்பேசி மீது அதிகமான சார்பு, எதிர்காலத்தில் மனிதர்கள் உணர்வுகளற்றவர்களாக மாறி, டிஜிட்டல் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும் என அவர் கணித்திருக்கிறார்.
கையடக்க தொலைப்பேசி அதிகமாகும் போது ஏற்படும் நிலைப்பாடு தொடர்பில் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் இந்த கணிப்பு தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
கணிப்புகள்
சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு இறந்து விட்டாலும் அவர் கூறிய கணிப்புகள் இன்றும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இயற்கை விபத்துகள் முதல் அரசியல் கலவரங்கள் வரை பல சர்வதேச நிகழ்வுகளைக் குறித்த அவரது முன் கணிப்புகள், நிகழ்காலச் சூழ்நிலைகளுடன் ஒத்துப்போகும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
