2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்
உலகம் விஞ்ஞான அறிவியலை அடிப்படையாக கொண்டு நகர்ந்து சென்றாலும் தற்போதும் மக்கள் பாபா வங்காவின் (Baba Vanga) வாக்கிற்கு முக்கியம் கொடுத்து வருகின்றனர்.
பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை சர்வதேச பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
பாபா வங்காவின் கணிப்புகள்
கொரோனா தொற்று நோய், இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான்(Japan) சுனாமி, அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விடயங்கள் இவர் முன்கூட்டியே கணித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2026ஆம் ஆண்டில் அதிகமான இயற்கை பேரழிவுகளும் நிகழும் என்று கூறப்படுகிறது. அவரின் கணிப்பின்படி, கிழக்கில் தொடங்கும் போர் மேற்கில் பரவிச் சென்று மேற்கத்திய நாடுகளை அழித்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு விளாடிமிர் புடின் உலகின் சக்திவாய்ந்த தலைவராக எழும்புவார் என்றும் கூறப்படுகிறது. “உலகின் அதிபதி” என்ற பட்டத்தை அவர் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் பெரும் போர் உண்டாகும் நிலையில், அதனால் சனத்தொகை குறையும் என குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் நீடிக்கிறது. இஸ்ரேல் பல்வேறு முனைகளில் போரில் ஈடுபட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்
சீனா – தாய்வான் மோதலும் உருவாகக்கூடிய சூழலில் உள்ளது. இத்தகைய அனைத்துப் போர்களும் இணைந்து 2026ஆம் ஆண்டு உலகப்போர் 3 வெடிக்க வழிவகுக்கும் என பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் எச்சரிக்கிறது.
2026ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். பல நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் நிகழும். பூமியின் 7–8% நிலப்பரப்பு மாற்றமடைந்து, பல சூழலியல் அமைப்புகள் அழிவடையும் என்றும் அவரது பக்தர்கள் நம்புகின்றனர்.
2026ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களின் வாழ்க்கையை ஆட்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
அது பல வேலைகளை பறித்துக்கொள்ளும், மனிதர்களின் உறவுகளை பாதிக்கும், அன்றாட வாழ்க்கையையே கட்டுப்படுத்தும்.
பிரான்ஸ் ஜோதிடர் நோஸ்ட்ரடாமஸ் கூட, தனது Les Propheties என்ற நூலில், இதேபோல 2026ஆம் ஆண்டில் AI உலகை ஆட்கொள்ளும் என்று எழுதியுள்ளார்.



