இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்! 2023ஆம் ஆண்டு இதெல்லாம் நடக்கும்:பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு(Video)
உலகில் பல தீர்க்கதரசிகள் இருந்துள்ளார்கள். அவர்களுள் பலரது கணிப்புகள் ஆரம்பத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும், இறுதியில் அந்த கணிப்புகள் நிறைவேறி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட பிரபலமான ஓர் தீர்க்கத்தரசி தான் பாபா வங்கா.
யார் இந்த பாபா வங்கா? பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார்.
1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் தனது 12-வயதில் பெரும் புயலில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இருக்கிறார்.
கடந்த கால கணிப்புகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினரால் பார்வை இழந்த நிலையில் மீட்கப்பட்டார். தனது பார்வையை இழந்த பிறகு எதிர்காலம் குறித்து இவர் கணிக்கத் தொடங்கினார். அவருக்கு இலட்சக்கணக்கில் சீடர்கள் இருந்தனர்.
குறிப்பாக ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னார் என்ற கதைகள் இணையம் முழுவதும் வைரலாக பரவிவருகின்றன.
இவர் கடந்த 1996- ஆம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் இறந்து விட்டார்.
இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். அதுவும் இவரது கணிப்புகளில் 85% சரியானவையாக இருக்கு என்று கூறப்படுகிறது.
இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இவரது பெரும்பாலான கணிப்புகள் பலித்து விட்டதாக சொல்லப்படுவதே இந்த பரபரப்புக்கு காரணம்.
உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின என குறிப்பிடுகிறார்கள்.
உலகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று கணித்து இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த உலகம் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணித்து இருந்தார். அவர் கூறியது போலவே கோவிட் பெருந்தொற்றால் உலகம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.
இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், 5079- ஆம் ஆண்டு வரை எதிர்காலம் பற்றி கணித்து வைத்திருப்பதாகவும் பாபா வங்காவின் கருத்துப்படி, அதுதான் இந்த உலகத்தின் கடைசியாக இருக்கும் என்பதாகவும் உள்ளது.
அந்த வகையில் தற்போது நாம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் நடக்கப்போவதை பாபா வங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்
அந்த வகையில் தற்போது பாபா வங்காவின் கணிப்பு ஒன்று மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சரி பாபா வங்காவின் கணிப்புபடி 2023ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று கணித்திருக்கின்றார் என்று நாம் பார்க்கலாம்.
பாபா வங்காவின் கணிப்புகளின் படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை கண்டிராத அளவில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும். அதாவது சூரிய சுனாமி என்பது சூரியனில் இருந்து வரும் ஆற்றல் வெடிப்புகள் ஆகும்.
இவை பில்லியன் கணக்கான அணுகுண்டுகளைப் போல சக்தி வாய்ந்தவை. இது பூமியின் காந்த கவசத்தைப் பாதிக்கும். இதனால் பூமியின் வேகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மாற்றம் பேரழிவை உண்டாக்கும் என கண்டித்துள்ளார்.
பாபா வங்காவின் கணிப்புகளின் படி, 2023 ஆம் ஆண்டில் ஒரு பெரிய நாடு மக்கள் மீது பயோ ஆயுத ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இந்த சோதனையால் நூறாயிரக்கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை இதை திறம்பட செய்தாலும், சில நாடுகள் ரகசியமாக பயோ ஆயுதங்களை இயக்கும் என்று தனது குறிப்புகளில் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
பாபா வங்காவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும். பூமியை ஏலியன்கள் ஆக்கிரமித்து வருவார்கள். அப்போது லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்றும் கணித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் ஆசியாவில் அணு வெடிப்பு ஏற்படலாம் என்றும் அணுமின் நிலையத்தில் ஏற்படும் வெடிப்பால் மேகங்களில் நச்சுக்கள் கலந்து ஆசியா கண்டம் நச்சு மேகங்களால் மூழ்கிவிடக்கூடும். இதனால் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் நோய்கள் ஏற்படக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் இருந்து இயற்கையான பிறப்புகள் தடைசெய்யப்பட்டு, மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
இப்படி ஆய்வகங்களில் பிறக்கும் மனிதர்களின் குணாதியம் மற்றும் தோலின் நிறம் போன்றவற்றை பெற்றோர்களே தீர்மானிக்க முடியும். இது நிச்சயம் பாபா வாங்காவின் மிகவும் திகிலூட்டும் கணிப்புக்களில் ஒன்றாகும்.
பாபா வங்காவின் 2023 கணிப்புகளில் முக்கிய அதிர்ச்சிதறக்கூடிய கணிப்பாக பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது பூமி ஒரு நல்ல சமநிலையில் உள்ளது. சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது காலநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
2023-ல் பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்பட்டால், அது பேரழிவை ஏற்படுத்தும். அதிலும் பூமி சூரியனுக்கு அருகில் நகர்ந்தால், அதிக வெப்ப கதிர்வீச்சை சந்திக்க நேரிடும்.
மறுபுறம், மேலும் பூமி நகர்ந்தால், உலகம் பனியுகத்திற்குள் மூழ்கி, இருள் பல மணிநேரம் நீடிக்கும். 2023 ஆம் ஆண்டில் பாபா வங்காவின் இந்த கணிப்புகளில் எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.