உக்ரைன் போர் தொடர்பில் பாபா வாங்காவின் கணிப்பால் அச்சத்தில் ரஷ்ய பெண் (Video)
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடர்ந்தும் நீடித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த நேரத்தில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அந்த வகையில், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்பு நம்பப்பட வேண்டும் என்றால், இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில், ரஷ்ய போர் வீரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலின் குரல் பதிவொன்று வைரலாகி வருகிறது. இந்த குரல் பதிவு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தால் பதிவேற்றப்பட்டது.
ரஷ்ய இராணுவ வீரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பு ஒட்டுக்கேட்டதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலின் போது, இருவரும் நீண்ட நேரம் சந்திக்க முடியாது என்று ஒருவருக்கொருவர் சொல்கிறார்கள்.
இராணுவ வீரர் தன் மனைவியிடம் இன்னும் வீட்டிற்கு செல்ல முடியாது என்று கூறுகிறார். இருவரும் பாபா வாங்காவின் தீர்க்கதரிசனத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். அதன் பிறகு, அந்தப் பெண் அழத் தொடங்குகிறாள்.
தொலைபேசி உரையாடலில் பேசியது என்ன
குரல் பதிவில், இராணுவ வீரர் தனது மனைவியிடம், “வாங்காவின் கணிப்புகளின்படி, இந்த போர் 2024 வரை நீடிக்கும் என்று கூறுகிறார். நான் உன்னை இரண்டு வருடங்கள் பார்க்க மாட்டேன்.
அப்போது அவருடைய மனைவி, என்னால் தங்க முடியாது என்று கூறியதுடன் பின்னர் அழ ஆரம்பிக்கிறார். கணவன் அந்த பெண்ணை அமைதிப்படுத்துகின்றார்.
பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகின்றன
பாபா வாங்கா இதுவரை கூறிய கணிப்புகள் அனைத்தும் ஏறக்குறைய உண்மையாகிவிட்டன. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலைப் போலவே, கொரோனா வைரஸ் தாக்குதல், பின்னர் ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து கணித்துள்ளார்.
பாபா வாங்கா இறப்பதற்கு முன் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கணிப்புகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது கணிப்புகளில் 85% வரை உண்மையாகிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.