அசர்பைஜான் விமான விபத்து தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்
அசர்பைஜான் (Azerbaijan) ஏர்லைன்ஸ் விமான விபத்தானது தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு (technical external interference) மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு (physical) ஆகிவற்றால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அசர்பைஜான் ஏர்லைன்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
அசர்பைஜான் (Azerbaijan) ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்திருந்தனர்.
விமானத்தை அவசரமாக தரையிறக்க மேற்கொண்ட முயற்சியால் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
விமான விபத்து
ஐரோப்பிய நாடான அசர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் குரோஸ்னி நகருக்கு 'எம்ப்ரேயர் 190’ ரக பயணிகள் விமானம் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி புறப்பட்டு சென்ற நிலையில், அதில் 2 விமானிகள் உட்பட 5 பணியாளர்களும், 62 பயணிகளும் பயணித்துள்ளனர்.
இந்த விமானம் கசகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் மீது பறவை ஒன்று மோதியதாகவும் இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படகிறது.
இதனால் கசகஸ்தானின் அக்தாவ் நகருக்கு திருப்பி அங்குள்ள விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அக்தாவ் நகர விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான அனுமதியை பெறப்பட்டுள்ளது.
இதன் படியே விமானம் திசை மாற்றப்பட்டு அக்தாவ் நகர விமான நிலையத்தை நோக்கி வந்துள்ளது.
காரணம்
எனினும், விமான நிலையத்தை அடைவதற்கு முன்பாக விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து திறந்தவெளி பகுதியில் திடீரென தரையில் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 38 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தனர்.
படுகாயம் அடைந்த அவர்களை காப்பாற்றிய மீட்பு குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |