இப்போ எங்கே அநுர..! நாட்டை மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியதாக அசாத் சாலி குற்றச்சாட்டு
அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் முகமது அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியபோது, நாட்டை மீட்பதற்காக சஜித்தோ அல்லது அநுரவோ முன்வரவில்லை. மாறாக, எமது நாட்டு மக்களுக்காக ரணில் விக்ரமசிங்கவே ஆட்சிக்கு வந்தார்.
ஆனால், தற்போது நாம் அவரை மறந்துவிட்டோம். வீதிகளில் இறங்கி அநுரவுக்காக வாக்கு கேட்ட பெண்களுக்காக இதுவரை அநுர ஒரு அமைச்சரவையைக்கூட சரியாக அமைக்கவில்லை.
அதேபோன்று, இனிவரும் காலங்களில் மாகாண சபைகள் இருக்காது என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால், அநுரவையும் அவரது கட்சியையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றார்.