மனிதச்சங்கிலி போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்: ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!
அகிம்சை ரீதியான போராட்டங்களில் மிகவும் வலுவான போராட்டமான மனிதச்சங்கிலி போராட்டத்தின் அர்த்தத்தினை சில அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தி விட்டார்கள் என தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்..
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கார்த்திகை வாசம் மலர் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு
மனித சங்கிலி போராட்டம்
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது. அதற்கு பின்னர் நாம் இனி துப்பாக்கி தூக்கி போராடக்கூடிய நிலைமையில் இல்லை ஆனால் அதற்கு ஒத்ததாக அகிம்சை ரீதியாக போராட முடியும் ஆனால் அதனை தலைமை தாங்குவதற்கு தலைமையேற்பதற்கு யாரும்.
இல்லை மக்களை சரியாக வழிபடுத்தவும் ஒழுங்கான தலைமை இல்லை. அண்மையில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மனித சங்கிலி போராட்டம் என மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரை மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள்.
ஆனால் அதில் கட்சி ஆதரவாளர்கள் கூட. பங்குபற்ற வில்லை வீதியால் சென்றவர்கள் அந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தாலேயே யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த மனித சங்கிலி போராட்டம்நீண்டிருக்கும். ஆனால் விதியால் சென்றவர்களும் பார்வையாளர்களாகவே சென்றதன் காரணமாக அந்த போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டு மனித சங்கிலி போராட்டம் தோல்வி அடைந்துள்ளது.” என்றார்.

இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்பு எடுத்த நபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
