திருகோணமலையில் நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு (Video)
சர்வதேச மனித விற்பனைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.
IOM நிறுவனத்தின் அனுசரணையுடன் AMCOR நிறுவனத்தின் வழிகாட்டலில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமாகியிருந்த இந்த நடைபவனி திருகோணமலை நகர மண்டபம் வரை சென்றிருந்தது.
விழிப்புணர்வு செயலமர்வு
குறித்த நடைபவனியில் மனித வியாபாரத்திற்கு எதிராக ஒன்றிணைவோம், உயிர்களை காப்போம், மாற்றத்திற்காக நடப்போம், மனித வியாபார வட்டத்தினை உடைப்போம், மனித வியாபாரத்தினை முடிவுறுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பாடசாலை மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து திருகோணமலை நகர மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம்பெற்றிருந்தது.








