யாழில் தொழுநோய் மற்றும் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு
தொழுநோய் மற்றும் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட ஹொக்கி அணியுடன் இணைந்து காவேரி கலா மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நேற்று (18.08.2024) மாலை நடாத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான விடயத்தை சமூகத்தில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிக சிறப்பான விடயம்.
சமூகத்தில் விழிப்புணர்வு
எனினும், விளையாட்டு வீரர்கள் சூழலியல் பார்வையில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதன் ஊடாக எவ்விதமாக உடல் ஆரோக்கியம் மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த செயற்பாட்டினை காவேரி கலா மன்றம் அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில் காவேரி கலா மன்றம், இந்த ஒகஸ்ட் மாதத்தில் காலநிலை மாற்றம் உடல் உள ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு இணைந்து இந்த ஹொக்கி விளையாட்டு போட்டியை நடாத்துவதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
