யாழில் பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்பூட்டல் பேரணி (Photos)
பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்கு விதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பொலித்தீன் விற்பனையாளருக்கான குறித்த பேரணி இன்று (16.11.2023) நடத்தப்பட்டுள்ளது.
விழிப்பூட்டல் பேரணி
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இதில் பொலித்தீன், பிளாஸ்டிக் விற்பனையாளர்களுக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்பூட்டல் இடம்பெற்றதுடன் பேரணியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் து.சுபோகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ். திருக்குடும்பக் கன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










டொனால்ட் டிரம்ப்பிற்கு இருக்கும் ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு உங்களுக்கு வருவதை எப்படி தடுக்கலாம்? Manithan
