சர்வதேச திறன் விருத்தி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!
சர்வதேச திறன் விருத்தி தினத்தை முன்னிட்டு இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணியும் கண்காட்சியும் நடைபெற்றது.
காலை 9.00மணிக்கு டிப்போ சந்தியிலிருந்து ஜேர்மன் தொழில் பயிற்சி நிலையம் வரை சுமார் ஏழு கிலோ மீட்டர் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
விழிப்புணர்வு பேரணியும் கண்காட்சியும்
குறித்த ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுடன் மாவட்டத்திலுள்ள உயர் கல்வி அமைச்சின் கீழுள்ள நிலையங்களின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
தொடந்து ஜேர்மன் தொழிற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் Dr.அஜித் வீரசிங்க இணைப் பேராசிரியர் (கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக இயந்திர பொறியியல் , பேராசிரியர் தர்மராஜா திருவாரன் மின்னணு பொறியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடம்) .ஆர். வள்ளுவன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) விருந்தினராக கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள்,தொழிற்பயிற்சி நிறுவன உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






