பாடசாலை மாணவர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை கமு/அல்-பஹ்ரியா (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று(7) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இதன் போது, நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் புலன் விசாரணை அதிகாரி மற்றும் பிரதி் அதிபர் மற்றும் பாடசாலையின் பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






