நாடளாவிய ரீதியில் புதிய திட்டம்! தர்மபுரம் பொலிஸாரும் களத்தில்
ஏ35 பிரதான வீதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கு தர்மபுரம் பொலிஸார் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்றைய தினம் (12.11.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு திட்டம்

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நாடு முழுவதிலும் பொலிஸார் விழிப்புணர்வு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையிலேயே தர்மபுரம் பொலிஸாரும் விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிப்பது தொடர்பாகவும், சாரதிகள் மதுபாவனை பயன்பாட்டினை தடை செய்ய வேண்டும் எனவும், குறித்த பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்கள் தமது பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் பொலிஸாரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri