மனித உரிமை மீறல் தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் : சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன்
சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கு மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது நேற்று (10.12.2022) யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த மனித உரிமைகள் கொண்டாடப்படுவதன் அவசியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
மனித உரிமை மீறல்
அதாவது இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் நாம் அனைவரும் அறிந்த போதிலும் அது தொடர்பில் எந்தவித காத்திரமான, எதிர்க்க முடியாத நிலையில் நாம் அனைவரும் காணப்படுகின்றோம்.
எனவே இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது இனியாவது மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்.
சாதாரணமாக கற்ற தரப்பினர் மத்தியில் மட்டும் இந்த மனித உரிமைகள் விழிப்புணர்வு காணப்படாமல், சாதாரண மக்களிடத்திலும் இந்த விழிப்புணர்வு காணப்பட வேண்டும்.
எனவே சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கும் இந்த மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு, எமது சகோதரர்களுக்கு, எமது தமிழ் பேசும் மக்களுக்கு, மனித உரிமைகள் மீறப்படாமல் நிறுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான உரிமைகள்

அங்கவீனர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவு கூறுகின்றோம்.
இந்த மனித உரிமை தினத்தின் உடைய முக்கியத்துவம் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினுடைய பொதுச் சபையிலே ஒரு முக்கியமான ஆவணம் நிறைவேற்றப்பட்டது.
அதாவது, அனைத்து உலக மனித உரிமை பிரகடனம். இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக் கூடிய ஒரு ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களுடைய உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.
சகல மக்களை ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளே அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அங்கவினர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
எனவே அரசுடன், சிவில் சமூகமும் அனைத்தும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதை இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
