பாடசாலை சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று(26) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது "பிள்ளைகளின் பாதுகாப்பு சாரதிகளின் கைகளிலே" எனும் தொனிப் பொருளில் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சமுக உளநல அதிகாரி யூ. எல். அசார்டீன் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரி - கிளப் வசந்த படுகொலையில் திடுக்கிடும் தகவல்கள்
40 மேற்பட்ட சாரதிகள்
இதன் போது கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை தமிழ் பிரிவிலுள்ள பாடசாலை சேவையில் ஈடுபடும் நாற்பதுக்கும் மேற்பட்ட சாரதிகள் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கல்முனை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகளுக்கான 1929 ஸ்டிகர்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இது தவிர பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சாரதிகள் குறைநிரைகள் ஆராயப்பட்டதுடன் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பனவும் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
