எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
எலிக்காச்சல் தடுப்பு நடவடிக்கை
தற்போது வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகளாக வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக 'doxicycline' வழங்கப்பட்டு வருகிறது.
ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சிவசுதன் தலமையிலான குழுவினரே இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் சில மரணங்கள், மற்றும் தொற்றுக்கு உள்ளான பலர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - எரிமலை
விழிப்புணர்வு
யாழ். வடமராட்சி பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிராமங்கள் தோறும் செல்லும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.
நகர சபை பகுதி
பருத்தித்துறை நகர சபை பகுதியிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |