பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு: வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலம் (Video)
பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்றையதினம் (09.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
இந்து பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக வெளிவாரிகள் பிரிவுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நகர்வழியாக ஆரம்ப இடத்தை சென்றடைந்தது.
இதன்போது வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களால் அகற்றப்பட்டிருந்தது.
இதில் இந்து பெளத்த சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











