இலங்கைக்கான பயணங்களை தவிருங்கள்! பிரித்தானியா அறிவுரை
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானியாவின் வெளிநாட்டு,பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
எனினும் இலங்கையின் சர்வதேச வானுார்தி நிலையத்தின் ஊடாக வான் போக்குவரத்துக்கு இந்த அறிவுரை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம். இதனை கருத்திற்கொண்டு தமது நாட்டு மக்கள், அரசியல் கூட்டங்கள் அல்லது எதிர்ப்புகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பாரிய கூட்டங்களின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடி
இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஜூலை 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நாட்டில் குறுகிய அறிவிப்பில் மேலும் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படலாம்.
இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை (டீசல் மற்றும் பெட்ரோல்) போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை இது பாதித்துள்ளது.
மின்சார விநியோகத்தில் தினந்தோறும் தடை ஏற்படுகிறது.
இதனால் போராட்டங்கள் மற்றும் வன்முறை கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும்
பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்
தெரிவித்துள்ளது.