நாடாளுமன்றத்தில் கடுமையான எச்சரித்த சபாநாயகர்..
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சகாக்களை (சக உறுப்பினர்களை) இலக்கு வைத்து பொருத்தமற்ற கருத்துக்களையும், அநாகரிகமான குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதைத் தவிர்க்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்றையதினம் (14) கடுமையாக எச்சரித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் உறுப்பினர்களுக்கு அறிவிப்புக்களை சமர்ப்பிக்கும்போது உரையாற்றிய சபாநாயகர், அண்மைக் காலமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது இவ்வாறான முறையற்ற நடத்தை அடிக்கடி அவதானிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
மதிப்பளிக்காத செயல்
அத்தகைய நடத்தையானது நாடாளுமன்றத்தின் மாண்புக்கு மதிப்பளிக்காத செயல் என்றும், அது வருந்தத்தக்கது என்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கைகளின்போது நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணான மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.