பதுக்கி வைத்து பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்: கணபதிப்பிள்ளை மகேசன்

Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Kanamirtha Jun 01, 2022 03:29 PM GMT
Report

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பதுக்கி வைத்து பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்: கணபதிப்பிள்ளை மகேசன் | Avoid Hoarding And Selling Goods

அதிக விலைக்கு எரிபொருள் விற்றல்

''நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலர் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடும். எனவே அவர்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்கக்கூடாது.

பதுக்கி வைத்து பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்: கணபதிப்பிள்ளை மகேசன் | Avoid Hoarding And Selling Goods

மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை 

பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்குப் பொதுமக்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. அவ்வாறு அவர்களிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

மேலும் யாழ்ப்பாணக் குடநாட்டிற்குத் தேவையான எரிபொருளின் அளவு முன்னரை விட அதிக அளவில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குக் கிடைப்பதாகவும், எனினும் மேலதிகமாக கிடைக்கும் எரிபொருள் எங்கே செல்கின்றது என்பது தெரியவில்லை.

மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போது பிரச்சினையாகக் காணப்படுவதாகவும் அதற்குரிய தீர்வு விரைவில் கிடைக்கும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US