கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள சராசரி வீட்டு வாடகை தொகை
கனடாவில்(Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை தொகையானது 2185 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொகையானது ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஏழு வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சராசரி மாதாந்த வாடகை
இது தொடர்பாக கனேடிய முன்னனி நிறுவனங்களினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வாடகை தொகையானது 0.8 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றின் சராசரி மாதாந்த வாடகை 1918 டொலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளை கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை தொகை 2301 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
