அவன்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos)

Gotabaya Rajapaksa Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Steephen May 11, 2022 05:46 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவரான வர்த்தகரான நிஷ்சங்க சேனாதிபதியின் அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்ரீ ஜயலவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பிரதான அலுவலகம் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது.

காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டகாரர்களுக்கு ஆதரவான மக்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமாகியுள்ளன. அத்துடன் அலுவலகத்திற்குள் இருந்த சில உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

அவன்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos) | Avant Garde Attack Nisanka Senathipathi அவன்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos) | Avant Garde Attack Nisanka Senathipathi

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான முன்னாள் இராணுவ அதிகாரியாவார். சர்வதேச கடற்பரப்பில் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் அவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

அவன்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos) | Avant Garde Attack Nisanka Senathipathi அவன்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos) | Avant Garde Attack Nisanka Senathipathi

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொண்டு வந்த அவன்கார்ட் நிறுவனத்திற்கான அந்த அனுமதியை கடந்த நல்லாட்சி அரசாங்கம் இரத்துச் செய்ததுடன் சர்வதேச கடற்பரப்பில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை கடற்படையினரிடம் ஒப்படைத்தது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், அது மீண்டும் அவன்கார்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

சர்வதேச கடற்பரப்பில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் மூலம் அவன்கார்ட் நிறுவனத்திற்கு மாதாந்தம் பல மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

அவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாக முன்னாள் படையினர் பணியாற்றி வருகின்றனர். இந்த பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அவன்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்கள், ஆர்ப்பாட்டகார்கள் மீது தாக்குதல் நடத்த அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அத்துடன் கம்பஹாவில் நடைபெற்ற அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்களை மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் மடக்கிப்பிடித்தனர். பிடிப்பட்டவர்கள் அவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

அவன்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos) | Avant Garde Attack Nisanka Senathipathi

May you like this Video


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US