1.16 டிரில்லியனாக உயர்ந்த வாகன கடன்கள்! மத்திய வங்கி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாகனக் கடன்கள் ரூ. 1.16 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதனால் வாகன இறக்குமதியின் அளவு அதிகரித்ததாகவும் அரச வருமானம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி இலக்குகளை விஞ்சியுள்ளது.
வாகனக் கடன்
முன்னதாக, கடந்த பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர் எதிர்பார்த்ததை விட கேள்வி அதிகரித்துள்ளது.

இதுவே வாகனக் கடன்களில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தக் கடன்களில் பெரும்பாலானவை குத்தகை வசதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மூலமான மொத்த மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்களின் பெறுமதி 1,837 பில்லியன் ரூபாய்கள் என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இந்த மொத்தத்தில், வாகன ஆதரவு கடன்கள் 63.2% ஆகும், அதன் மதிப்பு ரூ. 1,161 பில்லியன்களாகும்.
அதேநேரம் தங்க ஆதரவு கடன்கள், மொத்த கடனில் மேலும் 19.4% ஆகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.