மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து நூதனமான முறையில் திருட்டு
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி, சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம், கையடக்க தொலைபேசி என்பவற்றை சிலர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிதிதென்னை காட்டுப் பகுதியில் மயங்கிய நிலையில் நேற்று (28.05.2026) சாரதி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
வாடகைக்கு சவாரி செய்து வரும் பூநொச்சி முனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு வீடு சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் தரிப்பிடத்திற்கு சென்று இரவு சாப்பாட்டிற்கு இடியாப்பம் வாங்கி கொண்டு 7 மணிக்கு வருவதாக உறவினருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து குறித்த முச்சக்கரவண்டியை ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இரவு 11.00 மணியாகியும் சாரதி வீடு திரும்பாததையடுத்து அவரின் உறவினர்கள், அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, நேற்று (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை காட்டு பகுதியை அண்டிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் குறித்த நபரை தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசி, பணம் கொள்ளையிட்ட நிலை மயங்கி கிடப்பதை கண்டு கொண்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக மட்டு. தலைமையக மற்றும் வாழைச்சேனை பொலிசார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam