வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசம்
வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
நீதிமன்ற தடை தடை உத்தரவின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது.
மட்டக்களப்பு விடுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
நீண்ட இழுபறி
அதன்போது, பொது எதிர்க்கட்சியின் ஆதரவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வின்சன் பிரான்சிஸ், பத்து வாக்குகளைப் பெற்று இரண்டு மேலதிக வாக்குகளினால் தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதி 8 வாக்குகளை மட்டுமே பெற்றார். பொது எதிர்க்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த துசித லக்மல், 11 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் மூலம் புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நீண்ட இழுபறியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.