திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி ஸ்பாக்களை திறக்க அனுமதி - சுகாதார அதிகாரிகள் தெளிவுப்படுத்தல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி ஸ்பாக்கள் ஏன் செயல்பட அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், ஸ்பாக்கள் திறக்கப்பட்டமைக்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
ஆரம்பத்தில், கடுமையான வழிகாட்டுதல்கள் அமுல்செய்யப்பட்டன. பெரும்பாலும் அனைத்து ஸ்பாக்களும் மூடப்பட்டன.
கோவிட் - 19 தொற்றுகள் குறைந்து கொண்டிருக்கும் போது, நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை எளிதாக்க வேண்டும்.
அதன்படி படிப்படியாக கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுகின்றன என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், ஸ்பாக்களை மூடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டால் அதன்படி அதிகாரிகள் அந்த முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி விடுதிகள் மற்றும் மதுபானங்கள் கெசினோக்கள், இரவு கேளிக்கையகங்கள் மற்றும் பந்தய மையங்கள் மூடப்பட்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
