சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் : 14 வயது சிறுவன் கைது
அவுஸ்திரேலியாவின் (Australia) சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்தி குத்து சம்பவம் ஒன்று தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது காயமடைந்த 22 வயது இளைஞர், உடனடியாகவே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக நியூ சௌத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சிறுவன் தாக்குதலை மேற்கொண்டதற்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இளைஞர் மீது தாக்குதல்
எனினும் இணையத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிர மயமாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், வன்முறை தீவிரவாத சித்தாந்தங்களை தழுவி வன்முறையை நோக்கி செல்கின்றனர் என்றும் நியூ சௌத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இளைஞர் மீது தாக்குதல் நடத்திய 14 வயது சிறுவன், பேருந்தில் ஏறிய நிலையில் மருத்துவமனைக்கு அருகே கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின்படி, சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை.
முன்னதாக சிட்னியின் போண்டி பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்த சம்பவத்தின் பின்னர் இரண்டு மாதங்களில் இன்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |