தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள்

Dhayani
in ஆஸ்திரேலியாReport this article
“எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பனீஸின் தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி எனும் ஆப்கானிய அகதி,
“அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்ததால் சுமார் 15 ஆண்டுகளாக எனது தாயிடமிருந்து நான் பிரிந்திருக்கிறேன். இன்றிரவு (தேர்தல் முடிவு வெளியாகிய நேரம்) நான் அழுதேன், இறுதியாக எனது தாயையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் பார்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி! இரக்கம், கண்ணியம், மற்றும் மனிதாபிமானம் வென்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளில் நூற்றுக்கணக்கானோர் தாராளவாத தேசிய கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டு இருந்தனர். பல அகதிகள் சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்தனர், பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர முடியாத வகையிலான தற்காலிக விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
இவ்வாறு தற்போது தாராளவாத தேசிய கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் பாதிக்கப்பட்ட அகதிகள் அக்கூட்டணியின் தோல்வியைக் கொண்டாடி வருகின்றனர்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
