அவுஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள்- அறிக்கை வெளியானது.
அவுஸ்திரேலியாவின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னாள் பணியாளரான பிரிட்டானி ஹிக்கின்ஸ்(Brittany Higgins) அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் தனது சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டமையை அடுத்து நியமிக்கப்பட்ட குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தின் 51% பணியாளர்கள் சில வகையான கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் 63% பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் -
இது நாடாளுமன்ற பணியாளர்களை விட அதிக சதவீதமாகும். இத்தகைய சம்பவங்கள், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செயல்திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அறிக்கையை தயாரித்த பாலின பாகுபாடு தொடர்பான ஆணையாளர் கேட்ஸ் ஜென்கின்ஸ் (Kate Jenkins) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்கொட் மொரிசன் இந்த அறிக்கையில் வெளியான தகவல்கள் பயங்கரவமானவை என்று தெரிவித்துள்ளார்.


ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri