ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ ஜான் டக்வொர்த் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலும் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பிலும் இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
அத்துடன் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவூட்டிய பிரதமர் ஹரிணி, பிராந்திய, பலதரப்பு நிகழ்ச்சித் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு ஆஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தொழிற்கல்விப் பிரிவை வலுப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு என்பவற்றின் அவசியம் தொடர்பிலும் பிரதமரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.


