காலி சர்வதேச மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய அவுஸ்திரேலிய ஆளுநர்
அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரலும், அரசுத் தலைவருமான சாம் மோஸ்டின் ஏ.சி, இன்று காலை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம் செய்யிருந்தார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் உடன், அவுஸ்திரேலிய ஆளுநர் நட்புரீதியான கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரிகளால் அவுஸ்திரேலிய ஆளுநர் வரேவேற்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட்
மேலும் இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் பந்துல திசாநாயக்க, மைதானத்தின் வளமான வரலாறு குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வலுவான விளையாட்டு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், வளரும் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் மோஸ்டின் வழங்கிவைத்தார்.











