முகக்கவசம் அணியாத அவுஸ்திரேலிய துணைப்பிரதமருக்கு அபராதம்!
பொது இடமொன்றில் முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக அவுஸ்திரேலிய துணைப்பிரதமரும், National கட்சியின் தலைவருமான Barnaby Joyce-க்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Armidale என்ற இடத்தில், வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பிய பின் பணம் செலுத்துவதற்காகச் சென்ற Barnaby Joyce, முகக்கவசம் அணியாதிருந்ததை அவதானித்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தததையடுத்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது சுகாதார அறிவுறுத்தல்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துணைப்பிரதமர் Barnaby Joyce உட்பட சுமார் 54 பேருக்கு நேற்றைய தினம் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக State Emergency Operations Controller துணை ஆணையர் Gary Worboys தெரிவித்தார்.
துணைப்பிரதமராகவும் National கட்சியின் தலைவராகவும் Barnaby Joyce பொறுப்பேற்று ஒரு வாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
