இராணுவத்தினரின் கருத்தை மறுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்தினரால் கோட்டையிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் என்ற காரணத்திற்காக காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டார்கள் என இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்
இந்த செய்தியை சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நிராகரித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும் என்ற காரணத்திற்காக காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது போராட்டக்காரர்கள் அகற்றப்படவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் செயல்
அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை சுமந்திருந்த போராட்டக்காரர்களை இராணுவத்தினர் பலவந்தமாக வெளியேற்றியிருந்தனர்.
மேலும், இந்த போராட்டக்காரர்களினால் தங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
