ஆஷஸ் தொடர்! 5468 நாட்களுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் எழுதப்பட்ட வரலாறு

Cricket Australia England Cricket Team Australia Cricket Team
By Shadhu Shanker Dec 27, 2025 07:59 AM GMT
Report

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆவது ஆஷஸ் தொடரில் 5468 நாட்ககளுக்கு பின்னர் அதாவது 14 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் 4ஆவது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று(26) தொடங்கியது.

முதல் நாள் ஆட்டம்

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

அவுஸ்திரேலியா சா்பில் மிச்சேல் நேசர் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை எடுத்தார்.

aus vs eng

ஜோஸ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களில் சுருண்டது. ஹாரி புரூக் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை எடுத்தார். மிச்சேல் நேசர் 4 விக்கெட்டும், போலண்டு 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

42ஓட்டங்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

2ஆவது நாள் ஆட்டம்

இன்று(27) 2ஆவது நாள் ஆட்டம் ஆரம்பமானது.

இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் அவுஸ்திரேலியா விக்கெட்டுகள் சரிந்தன.

மதிய உணவு இடைவேளைக்குள் 88 ஓட்டங்களில் 6 விக்கெட்டை பறி கொடுத்தது. ஸ்காட் போலண்டு (6 ), ஜேக் வெதரால்ட் (5), லபு ஷேன் (8), டிராவிஸ் ஹெட் (46), உஸ்மான் கவா ஜா (10), அலெக்ஸ் கேரி (4) ஆகியோர் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஷஸ் தொடர்! 5468 நாட்களுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் எழுதப்பட்ட வரலாறு | Ashes Series England Defeated Australia 5468 Days

அதை தொடர்ந்து விக்கெட்டுகள் எளிதில் விழுந்தன. அவுஸ்திரேலியா அணி 34.3 ஓவர்களில் 132 ஓட்டங்களில் சுருண்டது.

இதனால் இங்கிலாந்துக்கு 175 ஓட்டங்கள் இலக்காக இருந்தது.

கேமரூன் கிரீன் 19 ஓட்டங்களிலும், நேசர், ஸ்டார்க் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், ரிச் சர்ட்சன் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் ஸ்டீவ் சுமித் 24 ஓட்டங்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஸ் டங் 2 விக்கெட்டும், அட்கின்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆஷஸ் தொடர்! 5468 நாட்களுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் எழுதப்பட்ட வரலாறு | Ashes Series England Defeated Australia 5468 Days

175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்சை ஆடியது.

தொடக்க வீரர் பென்டக்கெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

7ஆவது ஓவரில் தொடக்க ஜோடி சரிந்தது. டக்கெட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர், 34 ஓட்டங்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2ஆவது விக்கெட்டுக்கு கிராவ்லியுடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு

இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

போட்டியின் இறுதிவரை 18 ஓட்டங்களுடன் ஹாரி புரூக் மற்றும் 3 ஓட்டங்களுடன் ஸ்மித் களத்தில் இருந்தனர்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, சொந்த மண்ணிலிருந்து அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

5468 நாட்கள், அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

ஆஷஸ் தொடரின் முதல் மற்றும் 4ஆவது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் திகதி சிட்னியில் தொடங்குகிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US