இலங்கையில் கிரிக்கட் போட்டிகளில் விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி நிபந்தனை
இலங்கையில் கிரிக்கட் போட்டிகளில் விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி நிபந்தனைகளை விதித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி அவுஸ்திரேலிய அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம் ஆரம்பமாகின்றது.
இதன்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று ட்வெண்டி டுவெண்டி போட்டிகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
எரிபொருள் நெருக்கடி
இவற்றில் ட்வெண்டி டுவெண்டி கிரிக்கட் போட்டிகளை இரவு நேரத்திலும், ஒருநாள் போட்டிகளை பகல்-இரவு போட்டிகளாகவும் மின்னொளியிலும் நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை நெருக்கடி காரணமாக இப்போட்டிகளை பகல் நேரப் போட்டிகளாக அட்டவணையை மாற்றியமைக்க ஶ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஏனெனில் மின்னொளி விளக்குகளை செயற்படுத்த பாரியளவிலான டீசல் ஜெனரேட்டர்களை இயக்க வேண்டியிருப்பதே அதற்கான காரணமாகும்.
எனினும் ஏற்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் அனைத்துப் போட்டிகளும் மின்னொளியில் நடத்தப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி விடாப்பிடியாக நிபந்தனை விதித்துள்ளது.



