முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இனி 95 ஒக்டேன் பெற்றோல் இல்லை
முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் வழங்குவதை இடைநிறுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுப்பியுள்ளது.
ஒருசில முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்கள் வண்டிகளுக்கு நிரப்பும் சாக்கில் 95 ஒக்டேன் பெற்றோலைப் பெற்று அதனை அதிக விலைக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் 6142 மெட்ரிக் தொன் அளவிலேயே 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam